தமிழகத்தில் டிசம்பர் 20ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சென்னையில் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து மீம்ஸ் போட்டு வெளிப்படுத்தியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.