தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது தி.மு.க., அ.தி.மு.க இரண்டு திராவிடக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளாக இருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ஒருபடி மேலே சென்று ‘பூரண மதுவிலக்கு’ வாக்குறுதியை அளித்தது தி.மு.க. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் அதுபோல எந்த வாக்குறுதியையும் திமுக அளிக்கவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் வெறும் 1,311 டாஸ்மாக் கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாக ஆர்டிஐ கேள்விக்கு தமிழ்நாடு வாணிப கழகம் அதிர்ச்சி பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு 736 மது கடைகள் இருந்தன. திமுக ஆட்சியில் 40 கடைகளை மூடியது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா 500, இபிஎஸ் 500 கடைகளையும் மூடினர். நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் சில கடைகள் என மொத்தம் 1,311 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளது என கூறியுள்ளது.