தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் வருகிற ஜூன் 11ம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் தாராசுரம் கேஎஸ்கே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 8:30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் உள்ள முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கிறது.
எனவே இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் ஐந்தாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ, ஐடிஐ, BE உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இணைந்து தகுதிக்கு ஏற்ப பணிகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் கலந்துகொள்ளவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் தங்களுடைய சுய விபரக் குறிப்பு, கல்விச் சான்று ஆகிய நகல்களை எடுத்துச் செல்ல வேண்டும்.