Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 16 ஆம் தேதி முதல்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு போடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்  கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரையில் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி வைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது. தமிழக மக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

Categories

Tech |