Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி…. 2,500 வீரர்கள் பங்கேற்பு…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது. வருகிற 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட்தொடர் மாமல்லபுரத்திலுள்ள போர்பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் இந்தியா, நார்வே, பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா, ஸ்பெயின் உட்பட 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள். இந்த போட்டியில் இந்தியா சார்பாக மொத்தமாக 30 வீரர் மற்றும் வீராங்கனைகள் களம்காண இருக்கின்றனர். அவற்றில் தமிழகத்தைச் சேர்ந்த 7 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இவர்களுக்கு ஆலோசகராக செஸ்கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு வெகு விமரிசையாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாமல்லபுரத்தில் செஸ்ஒலிம்பியாட் ஒத்திகை போட்டி  துவங்கியது. இந்த ஒத்திகைபோட்டியை அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ, அன்பரசன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. துவங்கி வைத்தார். அதன்பின் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, மாமல்லபுரத்தில் இந்த போட்டிக்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து இருக்கிறது.

சில சோதனைகள் மட்டுமே செய்யவேண்டிய தேவை இருக்கிறது. அது நாளை முதல் துவங்கும். அத்துடன் இந்த போட்டியை நடத்த மற்றநாடுகளுக்கு போதுமான காலஅவகாசம் கொடுக்கப்படும். ஆனால் தமிழ்நாடு அரசுக்கு போதிய கால அவகாசம் கிடையாது. எனினும் 4 வருடங்களாக செய்யப்பட வேண்டிய பணிகளை வெறும் 4 மாதங்களில் தமிழக அரசு முடித்து காட்டியுள்ளது என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி செஸ்ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் சென்னை வரத் துவங்கியுள்ளனர். இவர்களுக்காக தனியார் விடுதி ஓட்டல்களில் அறைகள் முன் பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |