கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய , மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. கொரோனா பதிப்பை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதனை இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பினரும் ஏற்று ஊரடங்கை என்று கடைபிடித்து வருகின்றனர். தமிகத்திலும் இந்த ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டுள்ளது. இன்று இரவு 9 மணி வரை ஊரடங்கு உத்தரவ போடப்பட்ட நிலையில் நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மூன்று மாவட்டங்களிலும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்க ஆணையிட்டுள்ளனர் . கொரோனா பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களை மார்ச் 31ம் தேதி வரை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் டெல்லி , சத்தீஸ்கர், புதுச்சேரியில் மாஹே மாவட்டம் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 75 மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களிலும் அத்தியாவசிய தேவைகள் தவிர பிற அனைத்து சேவைகளும் முடக்கப்படுகின்றன என்ற அதிரடி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.