தமிழகத்தில் விரைவில் உதயசூரியன் மறைந்து தாமரை மலரும் என்று பாஜக துணை தலைவர் கே பி ராமலிங்கம் கூறியுள்ளார் . பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேபி ராமலிங்கம், நல்லாட்சி தின விழா கொண்டாடக்கூடிய தகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே உள்ளது. தற்போது தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த குடும்ப அரசியலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. விரைவில் தமிழகத்தில் சூரியன் மறைந்து தாமரை மலரும். விரைவில் அது நடக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
Categories
தமிழகத்தில் “சூரியன் மறைந்து, தாமரை மலரும்”…. விரைவில் அது நடக்கும்…. பாஜக துணைத் தலைவர் ஸ்பீச்….!!!!
