தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் தனி வேளாண் நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை மீதான 3-வது நாள் விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் சிலிண்டர் விலை குறைக்கப்படுமா என்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சிலிண்டர் விலை உயர்வால் தமிழக அரசுக்கு ஒரு ரூபாய் கூட கிடைப்பதில்லை. வரி விதிப்பும் அதிகாரமும் இல்லை. வருமானமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் சிலிண்டர் விலை குறைக்கப்படாது என்று தெளிவாக தெரிகிறது.