தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையையே இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. விலைவாசியும் அதற்கு ஏற்றவாறு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாய் ஆகவும், எம்- சான்ட் மணல் ஒரு யூனிட் 3,600- லிருந்து ரூ.4000, முக்கால் அங்குல ஜல்லி ஒரு யூனிட் 2500 ரூபாயில் இருந்து 2, 800 ஆகவும், ஒன்றரை அங்குல ஜல்லி ஒரு யூனிட் 2450 ரூபாயில் இருந்து 2, 600 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் தமிழகத்தில் சிமெண்ட் விலை கடந்த சில நாட்களில் ஒரு மூட்டை ரூ.370 இல் இருந்து 520 ஆக அதிகரித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு அதிகபட்ச விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். ஒரு மூட்டை ரூ.218 என்ற விலையிலான அரசு சிமெண்ட் (அம்மா சிமெண்ட்)விற்பனையை அதிகரித்து விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.