தமிழகத்தில் சனிக்கிழமைகளில் தனியார் பள்ளிகள் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர். எனவே அதற்கு ஏற்ப பள்ளிகள் செயல்பட வேண்டி உள்ளதால், சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சனிக்கிழமை அரசு பள்ளிகள் செயல்படவில்லை என்பதற்காக, தனியார் பள்ளிகளையும் செயல்பட அனுமதி மறுப்பது சரியல்ல என்றும், சனிக்கிழமை இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்போம் என தெரிவித்திருப்பதாகவும், கடந்த காலங்களைப் போன்று சனிக்கிழமைகளில், தனியார் பள்ளிகள் இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.