Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சனிக்கிழமை பள்ளிகள் இயங்குமா? (அ) விடுமுறையா?…. குழம்பும் மாணவர்கள்….!!!!

தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து அரசு பள்ளிகளிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த நான்கு நாட்களுக்கு பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் பள்ளிகள் இயங்குமா அல்லது விடுமுறையா என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் குழப்பம் அடைந்துள்ளனர். அரசு இதற்கு விரிவான விளக்கம் அளித்து முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |