மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவால் தொடங்கி வைக்கப்பட்ட கோவில் அன்னதான திட்டத்தில் பக்தர்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி அடிப்படையில் 1 நபருக்கு 25 ரூபாய் என்று நிர்ணயித்து அரசு நிதி ஒதுக்கியது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 5 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது விலைவாசி உயர்வு அடிப்படையில் ஒரு நபருக்கு 25 ரூபாய் என்பதை 35 ரூபாயாக உயர்த்தி அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனிடையில் தினசரி அதிகபட்சமாக 100 பேருக்கு அன்னதானம் வழங்க 3,500 ரூபாய் செலவழிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்படுத்தக்கூடிய மளிகை பொருட்கள், காய்கறிகள், தயிர் உள்ளிட்ட 32 வகையான பொருட்களை என்னென்ன அளவுகளில், எவ்வளவு விலைக்குள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது..