ஆதரவற்ற பெண்களுக்கு நலவாரியம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நமது தமிழ்நாட்டில் இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் கணவனால் கைவிடப்பட்டும், ஆதரவற்ற நிலையிலும் உள்ளனர். இவர்களுக்கு நமது தமிழக அரசு பல சலுகைகளை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு என்று தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் சமூக நலன்-மகளிர் உரிமை துறை அமைச்சர் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது நமது தமிழக அரசு ஆதரவற்ற நிலையில் உள்ள பெண்களுக்கு நல வாரியம் அமைப்பதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது. அதில் சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படும் என கூறியுள்ளது.