Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்…. தொடரும் மோசடி…. முதல்வர் அதிரடி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வங்கிகளில், வங்கி ஊழியர்கள் மூலமாக அதிக மோசடி நடைபெறுவதாக தகவல்கள் வைரலாகி வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்கரும்பலூர் கிராமத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 3800 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் அதிமுகவை சேர்ந்த மோகன் என்பவர் தலைவராக இருந்து வந்தார். இதற்கிடையில் அதிமுக ஆட்சியில் அரசு அறிவித்த மகளிர் சுய உதவி குழு கடன், பயிர்க்கடன், கரும்பு பயிர் கடன் என்று சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதுமட்டுமல்லாமல் அந்த சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் பெயரில், அவர்களுக்கு தெரியாமலே நகைக்கடன், பயிர்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவி குழு கடன் போன்றவைகளை கூட்டுறவு சங்க ஊழியர்கள் வாங்கி பண மோசடி செய்துள்ளனர். அதனை தொடர்ந்து 100க்கு அதிகமான கிராம மக்களிடம் நகை கடன் தருவதாக கூறி நகைகளை பெற்றுக்கொண்டு, அந்த நகைக்கடனுக்கான பணம் பிறகு வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கூட்டுறவு சங்க வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளனர்.

எனினும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இதுவரையிலும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தவில்லை. இந்த நிலையில் தற்பொது கொடுக்காத பணத்திற்கு வட்டி கட்டச் சொல்லி கிராம மக்கள் அனைவருக்கும் கூட்டுறவு சங்க ஊழியர்கள், நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக கூறுகின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் கூட்டுறவு சங்க ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களிடம் பெற்ற 450 சவரன் தங்க நகைகள் விற்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த முறைகேடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின்  தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |