Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடி யார் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் 5 சவரன் வரை பெற்ற நகை கடன்கள் தள்ளுபடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நகை பெற்றவர் அல்லது அவரை சார்ந்த ரத்த உறவுகள் அரசு வேலையில் இருந்தால் இந்த சலுகை அவர்களுக்கு பொருந்தாது என்று அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. ஆனால் இதுகுறித்து அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

Categories

Tech |