Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் சேஷாயி தொழில்நுட்ப பயிலரங்கத்தில் அம்மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் சி.வி கனேசன் போன்றோர் பங்கேற்று துவங்கிவைத்தனர்.

இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த சிறப்பு முகாமினை துறைசார்ந்த அமைச்சராக சி.வி.கணேசன் ஏற்பாடு செய்து இருக்கிறார். இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். போட்டித் தேர்வுக்கு பயிற்சியளிக்கப்படும் என ஏற்கனவே நாங்கள் கூறி இருந்தோம்.

கிராமப் புறங்களிலுள்ள ஏழை-எளிய மாணவர்கள் அரசு துறைகளில் பணிபுரிய வேண்டும் என்பதற்காக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு அவர்களை தயார்படுத்துவது தான் எங்கள் நோக்கம் ஆகும். ஏழை மாணவர்கள் பலனடைய வேண்டும் என்ற நோக்கில் தான் அரசு சார்பாக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. நீட்தேர்வை பொறுத்தவரையிலும் ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரும் ஒன்று சேர்ந்து தான் சட்ட மசோதவை அனுப்பி வைத்தோம்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |