Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் – காலையிலேயே நிம்மதி தரும் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாத வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனா தற்போது தமிழகத்தில் பரவி வருகிறது. இதையடுத்து கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் முட்டை, இறைச்சி ஆகியவை சாப்பிடலாமா? என்ற கேள்வி எழும்பியுள்ளது. மேலும் இந்த பறவை காய்ச்சலால் மனிதர்களுக்கும் பரவலாம் என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்தது .

இந்லையில் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கோவை மற்றும் தேனி மாவட்ட எல்லையோர பகுதிகளில் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. கால்நடை துறையோடு இணைந்து கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது என்று கூறியுள்ளார். எனவே மக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |