Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்த மின்சார வாகனங்கள்” அரசின் முடிவு என்ன?…. வெளியான தகவல்….!!!!

Sustainable Mobility Network மற்றும் தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய அமைப்புகளால் நியமிக்கப்பட்ட CMSR எனும் ஆலோசனைக் குழு சமீபத்தில் வாடிக்கையாளர்களிடம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இந்த கணக்கெடுப்பு சென்னையில் மட்டும் 1508 நபர்கள் என மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய ஐந்து பெரு நகரங்களைச் சேர்ந்த 9048 வாடிக்கையாளர்களிடம் எடுக்கப்பட்டது. இந்த கருத்துக்கேட்பின் மூலம், காற்று மாசு மற்றும் கால நிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்து முழுவதையும் மின் வாகனப் பயன்பாட்டிற்கு மாறவேண்டும் என்கின்ற கோரிக்கை மக்களிடம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. அதன்படி, டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை முழுவதும் உள்ள 78% நுகர்வோர் கடைசி மைல் டெலிவரி வாகனங்களால் காற்று மாசுபாட்டு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள 86% நுகர்வோர்கள் கடைசி மைல் டெலிவரியில் அதனை சார்ந்த நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது, பெரும் மாற்றத்தை உருவாக்கி மற்ற நிறுவனங்களையும் அவ்வாறு செய்ய வைக்க உதவும் என தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து சென்னையில் உள்ள 89% நுகர்வோர் இ-காமர்ஸ், உணவு, மளிகை பொருட்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனகளுக்கு மாறுவது மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை முழுவதும் உள்ள 67% நுகர்வோர்கள் இ-காமர்ஸ், உணவு, மளிகை பொருட்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனகளுக்கு மாறுவது மிகவும் முக்கியமானது என நம்புவதாக அந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. இதுகுறித்து CMSR-இன் ஆலோசனைக் குழுவின் இயக்குனர் கஜேந்திர ராய் கூறியது  “சென்னையைப் போன்ற வளர்ந்த நகரங்கள் இத்தகைய நிறுவனங்களுக்கான பிரதான சந்தை இடங்களாக விளங்குவதால் சென்னை முழுவதுமுள்ள வாடிக்கையாளர்களிடம் நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகளைக் கொண்டு விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்தான அவர்களின் கருத்துகள் இந்த ஆய்வில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கணக்கெடுப்பில் பங்குபெற்ற பெரும்பாலானவர்கள் 18 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் என்பதை உறுதிபடுத்திக்கொண்டோம். ஏனென்றால் இந்நிறுவனங்களின் பிரதான வாடிக்கையாளர்கள் அவர்களே.” என்று கூறினார். இதுகுறித்து Head of Business Initiatives at Climate Group கூறியது, “அனைத்து இணைய வர்த்தகம் மற்றும் உணவு நிறுவனங்கள் பொருட்களை விநியோகிக்க மாசற்ற வழிமுறைகளை பின்பற்றத் தொடங்க வேண்டும்.

மூன்றில் இரண்டு வாடிக்கையாளர்கள் தான் வாங்கும் பொருட்களின் விளைவாக ஏற்படும் காற்று மாசிற்கு தான் பொறுப்பிற்குள்ளானவர் என்பதை உணர்ந்தேயிருகிறார்கள் என்பதை இந்த கணக்கெடுப்பு உணர்த்துகிறது. அதுமட்டுமில்லா நிறுவனங்கள் மின்வாகனப் பயன்பாட்டிற்கு மாறுவதன் வழியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அவர்கள் நம்புகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் கூறியது, இந்த ஆய்வின் முடிவுகள் மாநில அளவில் கண்டிப்பான திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான ஆதரவு எத்தனை அவசியமானது என்பதை உணர்த்த கூடிய வகையில் உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி இதற்கு சிறந்த உதாரணங்களாக உள்ளன. “மகாராஷ்ட்ரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களை உதாரணமாகக் கொண்டு இணைய- வர்த்தகம் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்தை முற்றிலுமாக மின்வாகனப் பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தை தமிழ் நாடு அரசு ஏற்படுத்த வேண்டும்.” அதுமட்டுமில்லாமல் “தமிழ்நாடு அரசின் மின்வாகனத் திட்டங்கள் மின்சார வாகன உற்பத்திக்கானச் சூழலை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது என்றாலும் அதே நேரத்தில் அவை பயன்பாட்டிற்கு வரத்தேவையான சூழலையும் மாற்றத்தை நோக்கிய நகர்வையும் குறிப்பாக இணைய வர்த்தகத் துறையின் விற்பனை மற்றும் விநியோகப் பிரிவில் உருவாக்குவதிலும் கவனம் செல்லுத்துவது அவசியமானது.” என்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் கூறினார்.

Categories

Tech |