Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் பாடத்திட்டம் மாற்றம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளை போலவே கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ப இன்ஜினியரிங் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

அதனைப் போலவே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின் படி பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதற்கு ஏற்ப கல்லூரி பேராசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலமாக மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களாக இல்லாமல் தொழில் முனைவோராக அவர்கள் மாற முடியும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |