தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தெற்கு அந்தமான் கடலில் வருகின்ற டிசம்பர் 5ஆம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ம் தேதி தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளுக்கு வரும்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் டிசம்பர் 4,5,6ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.