தமிழகத்திற்கு கடும் குளிர் தொடர்பாக எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
சமூக வலைதளங்களில் பல வகையான செய்திகள் போலியாக சுற்றும்.. அதனை பெரும்பாலான மக்கள் உண்மையென நம்பிவிடுகின்றனர்.. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வந்தது.. அதாவது சூரியனை சுற்றியுள்ள பூமியின் நகர்வால் கடும் குளிர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது.. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம், அப்படி கடும் குளிர் தொடர்பாக எந்த எச்சரிக்கையும் எடுக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
சூரியனை சுற்றியுள்ள பூமியின் நகர்வால் கடும் குளிர் நிலவும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிய நிலையில், பரவிய இந்த செய்தியில் உண்மை இல்லை என்று நிரூபிக்கும் விதமாக வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது..