Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக… நஷ்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகள்….!!!

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் காசிமாயன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் விற்பனை மற்றும் லாபம் குறித்த தகவலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், கடந்த 2004ஆம் ஆண்டு அதிகபட்சம் 232.73 கோடி லாபம் கிடைத்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு 3.56 கோடி நஷ்டமும், 2012ஆம் ஆண்டு 103.64 கோடியும் , 2013ஆம் ஆண்டு 64.44 கோடியும், 2019ஆம் ஆண்டு 71.93 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக்குகள் அதிக லாபத்துடன் செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Categories

Tech |