தமிழகத்தில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு செல்லுபடி ஆகும் பழகுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த பழகுநர் உரிமத்தை வைத்து ஒரு மாதத்திற்கு பிறகு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க முடியும். ஆனால் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு நேரில் ஆஜராக வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் பழகுநர் உரிமம் பெறுபவர்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க தவறி விடுவதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து மக்களுக்கு இமெயில் மட்டும் செல்போன் மூலம் ஓட்டுநர் உரிமம் தேர்வு குறித்து அறிவிப்பு தரப்படும். விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் மீண்டும் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டியது வரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.