Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரே வாரத்தில்…. இவ்வளவு கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடியா?…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…..!!!!!!

ஏழை எளிய மக்களின் குடும்ப சுமையை குறைக்கும் பொருட்டு நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக சார்பாக 5 சவரனுக்கும் குறைவாக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பல நிபந்தனைகள் புகுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் இந்த நகைக்கடன் தள்ளுபடியை பெற முடியாது என்றும் வீட்டில் ஒருவருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் பல நிபந்தனைகள் புகுத்தப்பட்டது. அதன்பின் 48 லட்ச மக்களுக்கு நடைக்கடன் தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், 13 லட்ச ஏழை எளிய மக்கள் மட்டுமே அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு நகைக்கடன் வாங்கும் பட்டியலில் இடம்பிடித்தனர்.

இப்போது அனைத்து மாவட்டங்களிலுள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அடகு வைத்த நகைகள் மக்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டு திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஒருவாரத்தில் மட்டுமே ரூபாய் 4,805 கோடிக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். அதாவது ஒரே வாரத்தில் மட்டுமே 97.05 சதவீதம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |