கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அய்யா வைகுன்டர் அவதார தினவிழா மார்ச் 4-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவையொட்டி மார்ச் 4-ஆம் தேதி குமரிக்கு உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் 4-ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக மார்ச் 26-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 4-ஆம் தேதி அன்று தலைமை கருவூலம் மற்றும் கிளை அலுவலகங்கள் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.