Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒமிக்ரான் இல்லை…! அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!

தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்று இல்லை என்றும், இந்நோய் பற்றி பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை என்றும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒமைக்ரான் தொற்றுக்கு 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகத்தில் விமான நிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டு பயணிகளிடம் ஒமைக்ரான் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இதுவரை 5,249 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று இல்லை என்றும், 7 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருந்ததில் அது டெல்டா வகை தொற்று என்பது உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார். இப்போதைய நிலையில் தமிழகத்தில் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று இல்லை என்றும் அவர் கூறினார்.

Categories

Tech |