தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
இதில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்வது தொடர்பாக பேசப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பரிந்துரைத்திரிந்த நிலையில் அது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்பட்டால் ஊரடங்கு ரத்து செய்யவும் வாய்ப்புள்ளத்தாக கூறப்படுகிறது.