தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஊரடங்கு பலனாக பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. அதிலும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு விலக்கினாலும் அல்லது தளர்த்தினாலும் கோவையின் நிலையை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறையும் வரை ஊரடங்கு நீட்டிக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் இருந்து பல்வேறு வழிகளில் பலரும் கோவைக்கு வந்து செல்வதால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.