தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது, தமிழகத்தில் உள்ள அனைவரும் அடுத்த மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.
அதன்படி இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களில் மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்கள் நிகழ்ச்சிகளில் கூட்டமாக கூடுவது மற்றும் முகக்கவசம் முறையாக அணியாதது போன்ற காரணங்களால் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. பொதுமக்கள் காய்ச்சல் வந்தவுடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.