தமிழகத்தில் நடப்பாண்டிற்கு பள்ளிகள் கடந்த ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. மாணவர்கள் தொடர்ந்து பள்ளிகளுக்கு சென்று பாடங்கள் பயின்று வருகின்றன, பொதுவாக அனைத்து பள்ளிகளிலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு என்று கூடுதல் நேரம் அவர்களை படிக்க வைப்பதற்கு முயற்சி மேற்கொள்வது உண்டு. பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள பள்ளிக்கு வரச் சொல்லி பாடம் எடுப்பார்கள்.
அந்த வகையில் விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரும்படி கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்களை விடுமுறை நாட்களில் வரவழைக்கக் கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .