Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்…. நேரம் நீட்டிப்பு – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்-15 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றம் செய்யவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி காலை 7 முதல் 5.30 மணி வரை என்பதற்கு பதில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கொரோனா காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை மாற்றி தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Categories

Tech |