தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிரடி நடவடிக்கைகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. கோவில் திருப்பணி சார்ந்த நடவடிக்கைகள், கோவில் நிலங்களை மீட்பது மற்றும் அறநிலையத் துறை சார்பாக கல்லூரி அமைத்தல், மூன்று வேளை அன்னதானம் என அமைச்சர் சேகர்பாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் ஓராண்டு கால வைணவ பயிற்சியை அரசு அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ள இந்துக்கள் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். மாதம்தோறும் 3000 ரூபாய் உதவித்தொகை, தங்குமிடம், உணவு, சீருடை வழங்கப்படும். இந்து வைணவ கோட்பாடுகளை கடைபிடிப்பவராக இருக்க வேண்டும். தகுதி உடையவர்கள் hrce.tn.gov.in என்ற இணையத்தளத்தில் டிசம்பர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.