தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்ட பணிகளை ஆய்வு செய்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக ஆட்சியில் 3,700 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அது குறித்த பட்டியலை வெளியிட முடியுமா என கேள்வி எழுப்பினார். கோவில் பணியாளர்கள் நியமனம் தொடர்பான சர்ச்சை குறித்து அமைச்சர் விளக்கமளித்தார். அப்போது தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக ஊழியராக பணியாற்றுவோர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.