Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு கோடை விடுமுறை கிடையாது…. அரசு அறிவிப்பு…..!!!!!!

கோடைக்காலத்தில் தீ உள்ளிட்ட பல விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் தீயணைப்புவீரர்கள் விடுமுறை எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தீயணைப்புத்துறை மத்திய மண்டலம், மேற்கு, வடக்கு, தெற்கு, வடமேற்கு என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 331 தீயணைப்பு நிலையங்களுடன் இயங்குகின்றன. அதில் 7,000க்கும் அதிகமான அதிகாரிகள், வீரர்கள் இருக்கின்றனர். காவல்துறையினரை போன்றே இவர்களுக்கும் வாரவிடுமுறை இல்லை. எனினும் கிடைக்கும் நேரத்தில் வீட்டில் தீயணைப்பு வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். இதனிடையில் கோடைக்காலம், மழைககாலம், காற்று காலம் என காலத்திற்கேற்ப பணிகள் காத்திருக்கும்.

இப்போது கோடைக்காலம் என்பதால் தீயணைப்புவீரர்களுக்கான பணிகள் காத்திருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் கடுமையான வெயிலால் வாகனங்கள் தீப்பிடிக்கும். பல்வேறு ஊராட்சிகளில் சாலைகளில் குப்பை கொட்டி எரிக்கின்றனர். வெயில் காரணமாக செடிகள், புல் ஆகியவை காய்ந்து இருப்பதால், அதில் தீ பரவி விபத்து ஏற்படும். இதனை அணைப்பதற்கு தீயணைப்புத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்வர். இதைதவிர கோடைமழை, புயல் என பாதிப்பும் ஏற்படும்.

விபத்து, இயற்கை சீற்றம் ஆகியவற்றை சமாளிப்பதற்கு தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருக்க முன்பே அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் தீயணைப்புத்துறையினர் விடுமுறை எடுக்க அனுமதி இல்லை என்று சுற்றறிக்கை வந்துள்ளதாக தீயணைப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தது. காலை, இரவு என பணியில் உள்ளவர்களுக்கு ஒர நாள் ஓய்வு கிடைக்கும். இப்போது கோடைக்காலம் என்பதால் விபத்துகள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளதால் தீயணைப்புவீரர்கள் மற்றும் அதிகாரிகள் விடுமுறை எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |