தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே ரேஷன் அட்டை வைத்திருக்கும் பயனாளி மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால் அவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என சமீபத்தில் தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் இது தொடர்பாக கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தனியார் மயமாக்கப்படும் என்பது முற்றிலும் தவறான தகவல். நுகர் பொருள் வாலிபர் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும். ரேஷன் பொருள் கடத்தல் சம்பந்தமாக இதுவரை 11 ஆயிரத்து 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மேலும் மூன்று மாதங்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று பரவி வரும் தகவல் வதந்தி என்றும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்தில் வந்து வசிப்பவர்களுக்கும் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.