தமிழகத்தில் கொரோனா பிரச்சினை இன்னும் ஓயாத நிலையில் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. இந்த நிலையில் ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று முதலமைச்சருடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.