Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(9.12.22) மொத்தம் 24 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…? இதோ லிஸ்ட்…!!!

மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கனமழை காரணமாக 24 மாவட்டங்களுக்கு இன்று  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், கடலூர், செங்கல்பட்டு, திருவாரூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், சிவங்கை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், தருமபுரி, திருச்சி, நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில்  இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |