தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று 14-10-2022 மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவள்ளூர்
ஆவடியில் மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஆவடி: திருவள்ளுவா் தெரு, திருமலை நகா், குளக்கரை தெரு, எட்டியம்மன் நகா் பாண்டீஸ்வரம், சத்தியா நகா், கரலபாக்கம், கதவூா், வலச்சேரி, மேல கொண்டையூா் பட்டாபிராம், ஐயப்பன் நகா், வி.ஜி.வி நகா், கண்ணபாளையம், மேல்பாக்கம், வி.ஜி.என் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
விருதுநகர்
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள நல்லமநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது. எனவே, சோழபுரம், தேசிகாபுரம், நல்லமநாயக்கன்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், முதுகுடி, அயன் கொல்லங்கொண்டான், பட்டியூர், காமாட்சிபுரம், தெற்கு வெங்காநல்லூர், நக்கநேரி, இளந்திரை கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், கோட்டை ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
விழுப்புரம்
கெடார், இளமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி இன்று நடைபெறுகிறது. காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கெடார், மல்லிகைப்பட்டு, மாம்பழப்பட்டு, வெங்கந்துார், அகரம் சித்தாமூர், அத்தியூர்திருக்கை, காணை, கோனுார், கக்கனுார், காங்கியனுார், ஆரியூர், சாணிமேடு. இளமங்கலம், வடசிறுவளூர், ரெட்டணை, புளியனுார், தீவனுார், வெள்ளிமேடுப்பேட்டை, தாதாபுரம், வீரணாமூர் ஆகிய பகுதிகள் மின் விநியோகம் தடைபடும்.