தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்
இன்று மின் நிறுத்தம் செய்வது தொடர்பாக மாநகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் பணி மற்றும் மின்கம்பம் நடும் பணி இன்று நடைபெற உள்ளது இதனால் இந்த சாலையில் அமைந்துள்ள மருத்துவமனையில் இருந்து பாலாஜி நகர் சக்தி ஸ்நாக்ஸ் வரை உள்ள வணிக வளாகம் மற்றும் துவாரகம் நகர் செல்வம் நகர் டி பி எஸ் நகர் பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் காலை 9: 30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மின் பராமரிப்பு பணி காரணமாக திருநின்றவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருநின்றவூர் துணைமின் நிலையம் திருநின்றவூர் பாக்கம், புலியூர், ஆலத்தூர் , பாலமேடு, மேலப்பேடு, முத்தா புதுப்பேட்டை, வேப்பம்பட்டு, பெருமாள் பட்டு, கோவில் குப்பம், அரண்வாயில் குப்பம், புட்லூர், கொசுவன்பாளையம், ராஜங்குப்பம், அன்னம்பேடு, கோட்டாம்பேடு, நெமிலிச்சேரி, கருணாகரச்சேரி, புதுசத்திரம், ஜமீன் கொரட்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
இன்று கீழ் கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்:
சொக்கலிங்கநகர் 1 முதல் 9வது தெருக்கள், DSPநகர், பொன்மேனிமெயின் ரோடு, SS. Colony வடக்கு வாசல், பிள்ளையார் கோவில் தெரு, பொன்மேனிநாராயணன் தெரு ஜானகிநாராயணன் தெரு, அருணாச்சல் தெரு, திருவள்ளுவர் தெரு, வாழ்மீகி தெரு, சோலைமலை தியேட்டர் பின்புரம், மீனாட்சி நகர் 1 மற்றும் 2 வதுதெரு, ராமையா ஆசாரி தெரு, பொன்பாண்டி தெரு, பொன்மேனி குடியானவர் கிழக்கு தெரு, குமரன் தெரு, ஜவகர் மெயின் ரோடு 1முதல் 5 தெரு, கண்ணதாசன் தெரு, சுப்பிரமணியபிள்ளை தெரு, நாவலர் முதல் 3வது தெரு, பைபாஸ் ரோடு, பாரதியார் மெயின் ரோடு 1 மற்றும் 2 வது தெரு. நிலையூர் பகுதிகளில் சௌபாக்கியநகர், துர்காநகர், லைன்சிட்டி, SRV நகர் அமைதிசோலை, சுந்தர் நகர், JJநகர், ஹார்விப்பட்டி பகுதி ஆகும்.
நகரி ரோடு, அய்யங் கோட்டை, டபேதார் சந்தை. திருவானவாயநல்லூர், எழுவம்பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி, வடுகபட்டி. காடுபட்டி, கொடிக்குளம், திரவியம்பட்டி, ஜோதி மாணிக்கம் பகுதிகள்.