தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில் இடி முன்னுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் குமரி கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் ஆகிய பகுதிகளில் மழைக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.