தமிழகத்தில் இதுவரை 15 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளது. அதன்மூலம் 2 கோடியே 64 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 16-வது முகாம் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. மேலும் சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வாரம்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வந்தநிலையில், இந்த வாரம் சனிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் முகாம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் 17.31 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.