தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்து. ஆளுநர் உரையில், ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. ஆனால், குறிப்பிட்டபடி, ஜூலை மாதம் வெளியாகவில்லை. இந்நிலையில், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று வெளியாக இருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்னர், கடந்த 2001ஆம் ஆண்டு, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆண்டு பொது வெளியில் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளது. அதன்படி, இன்று காலை 11.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட இருக்கிறார்.அதில் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகைகள், கடன் விவரங்கள், வருவாய் இழப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றன.