தமிழகத்தில் அவசரகால மருத்துவ சேவைக்காக 108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் இந்த வருடம் 125 கோடி ரூபாய் மதிப்பீல் 500 அவசர கால ஊர்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் முதல் கட்டமாக 20 கோடி 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 90 ஆம்புலன்சுகளை ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தற்போது அதன் இரண்டாம் கட்டமாக 24 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பில் 108 ஆம்புலன்ஸ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.