தமிழகத்தில் சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளையில் இன்று முதல் வழக்குகள் அனைத்தும் நேரடியாக மட்டும் விசாரிக்கப்படும் என்று கடந்த மாதம் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் தொடங்க இருந்த நேரடி விசாரணை தொடர்பான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு, காணொலிக் காட்சி மூலமாக மட்டுமே அனைத்து வழக்குகளும் விசாரணை நடைபெறும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், நேரடி விசாரணை முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இ- மெயில் மூலம் அனுப்ப வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் குறிப்பிட்ட கவுண்டர்கள் அல்லது பிரத்யேகப் பெட்டிகளில் விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம். அச்சமயம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.