Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள்…. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த சூழலில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமால் இருந்து வந்தன.

தொற்று குறைவாக உள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி இயங்கி வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் முன்பு போல பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |