Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வு…. எதற்கெல்லாம் அனுமதி?….!!!!!

தமிழகத்தின் இரண்டாம் அலை கொரோனா பரவல் கடந்த ஏப்ரலில் அதிகரித்தது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் படிப்படியாக கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்திருக்கும் தமிழக அரசு, செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. அதன்படி கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி சினிமா தியேட்டர்களுக்கு அனுமதி, கல்லூரிகள் திறக்க அனுமதி, கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி என பல்வேறு தளர்வுகளை அளித்துள்ள தமிழக அரசு, தடை செய்யப்பட்டிருக்கும் வெளிமாநில பேருந்து சேவைக்கு மீண்டும் அனுமதி வழங்கியிருக்கிறது.

ஊரடங்கு தளர்வு எதற்கெல்லாம் அனுமதி?

அனைத்து கல்லூரிகளும் செப் 1 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும்.

அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகளும் (Diploma courses, polytechnic colleges) செப்டம்பர்  1 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும்.

50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும்.

கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்

உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் செயல்பட அனுமதி.

இதுவரை இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் இன்று முதல்  இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி

அங்கன்வாடி மையங்கள் செப்டம்பர் 1 முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும்.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் அனுமதி

மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

Categories

Tech |