தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தமிழக்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யவுள்ள மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி மற்றும் தஞ்சையில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கரூர், நாமக்கல், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.