Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு….. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில்,  சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மது கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று  முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட இருப்பதால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் டாஸ்மாக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மதுபானம் வாங்குவோர் தனிமனித இடைவேளையை பின்பற்றுகிறார்களா என பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்த கண்டிப்பாக தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்க நேரத்தை குறிப்பிட்டு டோக்கன் தரவேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாலை 4 மணிக்கு மேல் டோக்கன் வினியோகம் கூடாது. 5 மணிக்கு கடைகள் கட்டாயம் மூடப்பட வேண்டும். டாஸ்மாக் கடையில் இருந்து 300 முதல் 500 மீட்டர் தொலைவில் டோக்கன் வினியோகிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது.

Categories

Tech |