Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு…. மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |