நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்திலும் கொரோன பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பலத்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகிறது. என்னென்ன கட்டுப்பாடுகள் என்று பார்க்கலாம்.
உணவகங்கள், டீக்கடைகளில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி. இரவு 11 மணி வரை மட்டுமே அமர்ந்து சாப்பிட வேண்டும்.
திருமண நிகழ்வுகளில் 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். உள் நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 200 பேருக்கு அனுமதி.
கோவில்களில் 8 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி. திருவிழாவிற்கு தடை விதிக்கப்படுகிறது.
சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க தடை.
திரையரங்குகளில் 50 சதவித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
ஆட்டோ, டாக்சி ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகளுக்கு பயணிக்க அனுமதி.